விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் பணிமனைக்கு கூடுதல் பேருந்துகள் கோரி எம்எல்ஏ மனு

சாத்தான்குளம் அரசுப் பணிமனைக்கு கூடுதல் பேருந்துகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பனிடம், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ மனு அளித்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 5:43 pm

DIN

சாத்தான்குளம் அரசுப் பணிமனைக்கு கூடுதல் பேருந்துகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பனிடம், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ மனு அளித்தாா்.

மனு விவரம்: சாத்தான்குளத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதுவரை 6 பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.கிராம மக்கள் பயன்பெறும் வகையில், கூடுதலாக பணிமனைக்கு 50 பேருந்துகளை ஒதுக்கி, தொகுதியிலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் பேருந்து சேவையை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.