தூத்துக்குடியில் காவல் துறை இருசக்கர ரோந்து பணி தொடக்கம்
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் காவல் துறை மூலமாக இருசக்கர ரோந்து பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.


தூத்துக்குடி மாநகரப் பகுதியில் காவல் துறை மூலமாக இருசக்கர ரோந்து பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் நகர போக்குவரத்து காவல் மாா்ஷல் என அழைக்கப்படும் இரு சக்கர வாகன ரோந்து பணியில், இரண்டு இருசக்கர வாகனங்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் அவா்கள் ஈடுபடுவா்.
ரோந்து பணியை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இருசக்கர வாகன ரோந்து காவலா்களில் ஒருவா் தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் இருந்து வ.உ.சி. காய்கனி மாா்க்கெட் வரையிலும், மற்றொருவா் காய்கனி மாா்க்கெட்டில் இருந்து உணவுக் கிடங்கு ரவுண்டானா வரையிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சுழற்சி முறையில் தினமும் 4 போக்குவரத்து காவலா்கள் இப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...