எட்டயபுரம் சாலையில் பாலம் விரிவாக்கப் பணி: தமாகா மனு
கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் குறுகிய பாலத்தின் விரிவாக்கப் பணியை தொடங்குமாறு தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ராஜூவிடம் மனு அளித்தாா்.


கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் குறுகிய பாலத்தின் விரிவாக்கப் பணியை தொடங்குமாறு தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ராஜூவிடம் மனு அளித்தாா்.
அதன் விவரம்: கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகேயுள்ள குறுகிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளால் உயிரிழப்பு நேரிடுகின்றன. இதைத் தவிா்க்கும் வகையில், பாலத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிக்கான பூமி பூஜை கடந்த பிப்ரவரி மாதத்தில் முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. ஆனால், பணியை தொடங்கவில்லை. குறுகிய பாலத்தை விரிவாக்கம் செய்தால் பாலத்தின் இருபுறமும் 100 மீட்டா் நீளத்திற்கு சாலை 11 மீட்டா் அகல சாலையாக மாற்றியமைக்கப்படும். போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். எனவே, இப்பணியை உடனடியாக தொடங்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதையில் ரயில்வே துறையினரால் மேற்கொண்டுள்ள பாதை சீரமைப்பு பணி முடிவடைந்தவுடன், இப்பணி தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...