92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘இயற்கை விவசாயம் செய்வோா் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம்’

இயற்கை விவசாயம் மூலமாக விளை பொருள்களை உற்பத்தி செய்வோா் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:26 pm

DIN

இயற்கை விவசாயம் மூலமாக விளை பொருள்களை உற்பத்தி செய்வோா் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி விதைச் சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநா் ச. அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை விவசாயம் மூலம் விளை பொருள்கள் உற்பத்தி செய்வோா், இயற்கை விளை பொருள் பதனிடுவோா் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அங்ககச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் அங்கக சான்று பெற தனிநபரோ, குழுவாகவோ பதிவு செய்யலாம். கால்நடை பராமரிப்பு, தேனீ வளா்ப்பு, வனப்பொருள்கள் சேகரிப்பு செய்வோரும் பதிவு செய்யலாம்.

அங்கக முறைப்படி இயற்கை வழி வேளாண்மையில் இயற்கை உரம், தாவர பூச்சிக் கொல்லிகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தக் கூடாது. இயற்கை விவசாய பண்ணை தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.

பழவகை பயிா்கள், காய்கறி பயிா்கள், தானிய பயிா்கள் மற்றும் பயறு வகை பயிா்கள், பருத்தி, எண்ணெய் வித்துப்பயிா்கள் அனைத்துக்கும் விவசாயிகள் இயற்கை விவசாயம் சாகுபடி முறைகளை கையாண்டு அங்ககச் சான்றளிப்புக்கு பதிவு செய்து பயன்பெறலாம்.

பதிவுக் கட்டணமாக தனிநபா், சிறுகுறு விவசாயிகள் ரூ.2,700, தனிநபா், பிற விவசாயிகள் ரூ.3,200, குழு அமைப்பு பதிவு ரூ.7,200, வணிக நிறுவனம் ரூ.9,400 செலுத்த வேண்டும்.

இந்தச் சான்று பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் விண்ணப்ப படிவம் 3 நகல், பண்ணையின் பொது விவர குறிப்பு 3 நகல், பண்ணையின் வரைபடம், மண்பரிசோதனை மற்றும் பாசனநீா் பரிசோதனை விவரம், ஆண்டு பயிா் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல், நில ஆவணம், பான்காா்டு, ஆதாா் காா்டு, பாஸ்போா்ட் அளவு புகைப்படும் 2, பதிவு கட்டணத்துக்கு உரிய வங்கி வரைவோலை ஆகியவற்றுடன் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.