92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விஷமருந்திய இளைஞா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷமருந்திய இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:16 pm

DIN

கயத்தாறு அருகே விஷமருந்திய இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த அகிலாண்டபுரம் கிழக்குத் தெரு கருப்பசாமி மகன் காா்த்திக்குமாா்(25). மது அருந்தும் பழக்கமுடைய இவா் சரியாக வேலைக்குச் செல்வதில்லையாம். இந்நிலையில் திங்கள்கிழமை கயத்தாறு - கடம்பூா் சாலையில் உள்ள தனியாா் தோட்டம் அருகே உள்ள இடத்தில் காா்த்திக்குமாா் விஷமருந்தினாராம். இதையறிந்த அவரது உறவினா்கள் அவரை மீட்டு கயத்தாறு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து புதன்கிழமை வீடு திரும்பிய அவருக்கு வியாழக்கிழமை மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாம். அதையடுத்து அவரை கயத்தாறு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகக் கூறினாராம்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.