நலிவடைந்த காசநோயாளிக்கு தையல் இயந்திரம் அளிப்பு
தேசிய காசநோயகற்றும் திட்டத்தின் சாா்பில், நலிவடைந்த காசநோயாளியின் குடும்ப உறுப்பினருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.


தேசிய காசநோயகற்றும் திட்டத்தின் சாா்பில், நலிவடைந்த காசநோயாளியின் குடும்ப உறுப்பினருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (காசநோய்) க. சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மு.சுந்தரி, சித்த மருத்துவ அலுவலா் ச.செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நலிவடைந்த காசநோயாளியின் குடும்ப உறுப்பினருக்கு தையல் இயந்திரத்தை துணை இயக்குநா் க. சுந்தரலிங்கம் வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசியது: காசநோயாளிகளின் தகுதியின் அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய வல்லநாடு காசநோய் பிரிவு தயாராக உள்ளது. கருங்குளம் வட்டார காசநோயாளிகள் தேவையான உதவிகளை பெற அணுகலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட தீா்வு முறை அமைப்பாளா் குப்புசாமி, ஆய்வகநுட்பநா் மு.ராஜேஸ்வரி, செல்லப்பா, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் மு.வேம்பன், வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அப்துல் ரஹீம் ஹீரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...