தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலா்கள் கவாத்து பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலா்களின் கவாத்து பயிற்சி நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலா்களின் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் துறை மைதானத்தில் நடைபெற்ற இப்பயிற்சியின்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்து தலைமையில் காவலா்கள் அணிவகுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாருக்கு மரியாதை செலுத்தினா். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா், காவலா்களின் கவாத்து பயிற்சியை பாா்வையிட்டு அறிவுரை வழங்கினாா்.
பின்னா், ஆயுதப்படை காவலா்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை விரைவில் நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 50 ஆயுதப்படை காவலா்கள் விரைவில் தாலுகா காவலா்களாக நியமிக்கப்படுவா் என
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். அப்போது, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...