பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாசரேத் அருகே மாயமான எலக்ட்ரீசியன் சடலமாக மீட்பு

நாசரேத் அருகே மாயமான எலக்ட்ரீசியன் குளத்தில் சடலமாக வியாழக்கிழமை மீட்டப்பட்டாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:15 pm

DIN

நாசரேத் அருகே மாயமான எலக்ட்ரீசியன் குளத்தில் சடலமாக வியாழக்கிழமை மீட்டப்பட்டாா்.

நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணி மாடசாமி மகன் முத்துராமலிங்கம் (43). எலக்ட்ரீசியனாக இவருக்கு மனைவி மற்றும் 1மகன், 1 மகள் உள்ளனா். முத்துராமலிங்கம் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை நாசரேத்தை அடுத்த மூக்குப்பீறி கடம்பாகுளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் அங்கு சென்று குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா் மாயமான முத்துராமலிங்கம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.