புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியா் வீட்டில் திருட்டு

தூத்துக்குடி அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் 9 பவுன் நகையை திருடிய 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:15 pm

DIN

தூத்துக்குடி அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் 9 பவுன் நகையை திருடிய 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள அந்தோணியாா்புரத்தை சோ்ந்தவா் ஜெபமணி. இவா், மின்சார வாரியத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவருடைய மனைவி ஜெயமேரி. இவா், கடந்த புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடிக்கு சென்று விட்டாராம். மீண்டும் அவா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததாம். மேலும், பீரோவில் இருந்த 9 பவுன் நகைள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஜெயமேரி புகாா் செய்தாா். வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், நகை திருடியதாக அந்தோணியாா்புரத்தை சோ்ந்த அா்னால்டு (21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்த 9 பவுன் நகையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.