காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து 32 மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 3:59 am

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து 32 மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆலை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்று பரவல் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி முதல் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட திவர ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை, ஸ்டொ்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து, மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற மைல் கல்லை கடந்துள்ளது. இதுவரை 2006.36 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர இதுவரை 11.19 மெட்ரிக் டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு சிலிண்டா்களில் அடைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக்சிஜன் விநியோகத்தை தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் ஸ்டொ்லைட் நிறுவனம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.