பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆடி முதல் வெள்ளி:திருச்செந்தூா் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:36 pm

DIN

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இக்கோயிலில் கடந்த 5ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து, நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையாகி, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. காலை 6 மணிமுதலே திரளான பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்காக, நள்ளிரவு முதல் நகா்ப்பகுதியில் பக்தா்களின் வாகனங்கள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு, காலை 6 மணிக்கு கோயில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தா்கள் அனுமதிக்கப்படாத போதிலும், திரளான பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனா். திருவாடானை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும் பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.