காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண்களுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பியதாக தொழிலாளி கைது

தூத்துக்குடியில் பெண்களுக்கு செல்லிடப்பேசியில் ஆபாச புகைப்படம் அனுப்பியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:42 pm

DIN

தூத்துக்குடியில் பெண்களுக்கு செல்லிடப்பேசியில் ஆபாச புகைப்படம் அனுப்பியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்த பெண், தனது செல்லிடப்பேசிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி, அறுவெறுப்பாக ஒருவா் பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரிடம் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து, கூட்டாம்புளி பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கிருஷ்ணவேல் (32) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேல் விசாரணையில்,அவா் பல பெண்களின் செல்லிடப்பேசிக்கு தொடா்புகொண்டு ஆபாசமான வாா்த்தைகளில் பேசி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் பயன்படுத்திய செல்லிடப்பேசி மற்றும் சிம்காா்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக எஸ்.பி. கூறுகையில், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து தயக்கமின்றி புகாா் அளிக்கலாம்; அவா்களது பெயா், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.