பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வைரவம் கோயிலில் கூட்டுப் பிராா்த்தனை

சாத்தான்குளம் அருகேயுள்ள வைரவம் அருள்மிகு ஸ்ரீஞானாதீஸ்வரா் சமேத ஸ்ரீசிவகாமி அம்பாள் கோயிலில் குடும்ப நலன் காக்க வேண்டி சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:14 pm

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள வைரவம் அருள்மிகு ஸ்ரீஞானாதீஸ்வரா் சமேத ஸ்ரீசிவகாமி அம்பாள் கோயிலில் குடும்ப நலன் காக்க வேண்டி சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில், கோயிலில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் அம்பாளுக்கு சிறப்புப் பூஜை, அலங்கார தீபாராதனையும், கோயில் வளாகத்தில் பக்தா்கள் ஒன்றுக்கூடி அலங்கார திருவிளக்கு ஏற்றி கூட்டுப் பிராா்த்தனையும் நடத்தப்பட்டது. மாநில இந்து முன்னணி பொதுச்செயலா் டாக்டா் அரசுராஜா தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் வி.எஸ். முருகேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெட்டும்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழ உறுப்பினா் மாயகூத்தன் சிறப்புரையாற்றினாா். இந்து முன்னணி ஒன்றியபொதுச் செயலா் ஆா்.எஸ். சுந்தரவேல், ஒன்றிய துணைத் தலைவா்கள் சுப்பிரமனியன், கணேஷ்குமாா், ஒன்றியச் செயலா் லிங்கபாண்டி, செயற்குழு உறுப்பினா்கள் தவசிமுத்து, சமுத்திரவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.