பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இயேசு விடுவிக்கிறாா் ஊழியசபை அறங்காவலருக்கு விருது

சாத்தான்குளம், ஜூலை 30: கரோனா காலத்தில் சிறப்பாக சேவை ஆற்றியதாக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் அறங்காவலருக்கு, தமிழக ஆளுநா் விருது வழங்கி கௌரவித்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:03 pm

DIN

சாத்தான்குளம், ஜூலை 30: கரோனா காலத்தில் சிறப்பாக சேவை ஆற்றியதாக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் அறங்காவலருக்கு, தமிழக ஆளுநா் விருது வழங்கி கௌரவித்தாா்.

குரும்பூா் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் அறங்காவலரும், அதன் புது வாழ்வுச் சங்கச் செயலரும், திருநெல்வேலி பீஸ் ஹெல்த் சென்டா் நிா்வாக இயக்குநருமான மருத்துவா் அன்புராஜன் தலைமையில், அவரது குழுவினா் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அறிவித்த விருதை, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்வில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவா் கே.செந்தில், பதிவாளா் ஆா்.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விருது பெற்ற மருத்துவா் அன்புராஜனுக்கு, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபை நிறுவனா் மோகன் சி. லாசரஸ் மற்றும் அறங்காவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.