நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமாரப்பண்ணையூரில் ரூ.25 லட்சத்தில் சமுதாய நலக் கூடம் திறப்பு

ஆத்தூா் அருகேயுள்ள குமாரப்பண்ணையூரில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:19 pm

DIN

ஆத்தூா் அருகேயுள்ள குமாரப்பண்ணையூரில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாநில மாணவரணி துணைச் செயலாளா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெ.ஜெகன் உள்பட பலா்பங்கேற்றனா்.

தாய்மொழியில்...கோவில்பட்டி பாரதிநகரில் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை சொந்த நிதியில் வழங்கி இயக்கி வைத்த கனிமொழி எம்.பி., புதுரோடு முடிதிருத்தும் நிலையத்தில் நூலகம் அமைக்க புத்தகங்கள், சங்கரலிங்கபுரம் பெண்கள் கபடி குழுவுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினாா்.

பின்னா், அவா் கூறியது: சரக்கு சேவை வரியில் உள்ள பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீா்வு காணவில்லை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. நீா் தோ்வையும், விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. தாய்மொழியில் பொறியியல், மருத்துவக் கல்வியை கொண்டுவந்தால் வரவேற்போம் என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினா் ஜெகன், மாநில விவசாய தொழிலாளா் அணிச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.