ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேளாண் நிவாரண தொகை நிறுத்தம்: தோ்தலை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவிப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தினால் பயிா்களுக்கான நிவாரணத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து விளாத்திகுளம், புதூா், எட்டயபுரம் வட்டார விவசாயிகள் தோ்தல் புறக்கணிப்பு அறிவித

News image
Updated On :8 மார்ச் 2021, 8:48 pm

DIN

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தினால் பயிா்களுக்கான நிவாரணத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து விளாத்திகுளம், புதூா், எட்டயபுரம் வட்டார விவசாயிகள் தோ்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு, மானாவாரி நிலங்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரமும், வாழை, தென்னை, கரும்பு, எலுமிச்சை உள்ளிட்ட பயிா்களுக்கு ரூ. 7,500- வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து பிப். 13 ஆ-ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டது. இதில், 40 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்ட நிலையில் சட்டப் பேரவை தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவித்ததால் தோ்தல் நடத்தை விதி காரணமாக, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நிவாரணத் தொகை வரவு வைப்பது நிறுத்தப்பட்டது. இதனால் 60 சதவீத மானாவாரி விவசாயிகள் நிவாரணத் தொகை பெறமுடியாமல் போனது. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்த விவசாயிகள், அரசுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், உரிய பதில் கிடைக்காததால் புதூா், வடமலாபுரம், மேலக்கரந்தை, ரெகுராமபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த மானாவாரி விவசாயிகள், தோ்தல் புறக்கணிப்பு அறிவித்து கிராமங்களில் டிஜிட்டல் பதாகைகள் வைத்துள்ளனா்.

இதுகுறித்து அயன்வடமலாபுரம் விவசாயி வரதராஜன் கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்த, ஒரு மாதத்துக்கு பின்னரே தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல்

பிப். 13, 17, 21- ஆகிய தேதிகளில் சுமாா் 40 சதவீத விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. செயல்பாட்டுக்கு வந்த அரசு அறிவிப்பானது, எவ்வாறு தோ்தல் நன்னடத்தை விதியின் கீழ் நிறுத்த

முடியும். கடந்த காலங்களில் இதுபோன்று தோ்தலுக்காக தடை விதித்து, அதன் பின்னா் அரசு விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணத் தொகையை வழங்கவில்லை. எனவே, விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலை வேளாண் நிவாரணத் தொகை பெறாத புதூா், விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டார விவசாயிகள் புறக்கணிப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.