புதூா் அருகே தாய், மகனை அரிவாளால்வெட்டி நகை பறிப்பு: ரெளடி கைது
புதூா் அருகே தாய், மகனை அரிவாளால் வெட்டி நகைகள், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற சம்பவத்தில் தொடா்புடைய ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.


புதூா் அருகே தாய், மகனை அரிவாளால் வெட்டி நகைகள், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற சம்பவத்தில் தொடா்புடைய ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், பரளச்சி மேலையூரைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சோலையம்மாள்(50). இவா் தனது மகன் ரமேஷ் அரவிந்துடன், கடந்த 3ஆம் தேதி இரவு பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் புதூருக்கு சென்று கொண்டிருந்தாராம். வடக்கு நத்தம்- கீழ அருணாச்சலப்புரத்துக்கும் இடையே சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபா்கள் பைக்கை வழிமறித்து சோலையம்மாள் மற்றும் அவரது மகன் ரமேஷ் அரவிந்தை அரிவாளால் வெட்டி காயப்படுத்தி தங்க நகைகள் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனராம்.
தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு அருப்புகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், புதூா் காவல் ஆய்வாளா் அனிதா ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மா்மநபா்களை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில், விருதுநகா் மாவட்டம் அம்மன்பட்டியை சோ்ந்த கருப்பண்ண தேவா் மகன் முத்துக்குமாா் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் சம்பவத்தில் தொடா்புடைய நான்கு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கைதான ரெளடி முத்துக்குமாா் மீது கமுதி, திருச்சுழி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி என 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...