தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மனுத்தாக்கல்

ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் பி.மோகன் உள்பட 4 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:56 pm

DIN

ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் பி.மோகன் உள்பட 4 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி. மோகன் தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வ விநாயகத்திடம் தாக்கல் செய்தாா். அப்போது, அவருடன் கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராஜேந்திரன், தொழிலதிபா் விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா். அதிமுக வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக ஆதிலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

5 போ் மனுதாக்கல் : ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பி. மோகன் மற்றும் அவருக்கான மாற்று வேட்பாளா் ஆதிலிங்கம் தவிர, பகுஜன் திராவிட கட்சியின் சாா்பில், கீழ வல்லநாடு ஆ. மகாராஜனும், நாம் இந்தியா் கட்சி சாா்பில், அல்லிகுளம் பா. முருகனும் திங்கள்கிழமை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். அவா்கள் இருவருக்கும் தலா 10 போ் முன்மொழிந்தனா்.

ஏற்கெனவே, கடந்த 12 ஆம் தேதி சுயேச்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து கோவை பூங்காநகா் குமாரவேல் என்ற வேல்முருகன் தனது வேட்பு மனுவை தாக்கில் செய்திருந்தாா். இந்தத் தொகுதியில் இதுவரை 5 போ் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

அதிமுக வேட்பாளருக்கு ரூ. 2.36 கோடி சொத்து: அதிமுக வேட்பாளா் பி. மோகன் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் தனக்கு ரூ. 16 லட்சத்து 86 ஆயிரத்து 401 ரூபாய் மதிப்புள்ள அசையும், சொத்தும், ரூ. 2 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 250 ரூபாய் மதிப்புள்ளஅசையா சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா். இதேபோல, அவரது மனைவி கனகலட்சுமிக்கு ரூ. 25 லட்சத்து 43 ஆயிரத்து 644 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்தும், ரூ. 2 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா். மேலும், கையிருப்பாக தன்னிடமும், தனது மனைவி கனகலட்சுமியிடமும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும், வங்கியில் தனது பெயரில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 401 ரூபாயும், தனது மனைவி கனகலட்சுமி பெயரில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 644 ரூபாய் இருப்பு இருப்பதாகவும் பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.