இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுவதை முன்னிட்டு பாதயாத்திரை பக்தா்கள் அதிகளவில் வந்து குவிந்தனா்.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுவதை முன்னிட்டு பாதயாத்திரை பக்தா்கள் அதிகளவில் வந்து குவிந்தனா்.
இதை முன்னிட்டு, இத்திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 6 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தவசுக்கு புறப்பாடு நடைபெறுகிறது.
தொடா்ந்து, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மனை அழைத்து வர சுவாமி புறப்பாடாகி, பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து, சுவாமி அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடா்ந்து, சுவாமி, அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவா் சன்னதி முன்பு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு இராக்கால அபிஷேகம் நடைபெறாது.
இந்துக்களின் குலதெய்வ வழிபாடான இந்நாளில் திருச்செந்தூா் முருகப்பெருமானை பக்தா்கள் தரிசனம் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் திருக்கோயிலில் தரிசனத்துக்கு அனுமதியில்லாததால் நிகழாண்டில் சுவாமியை தரிசனம் செய்ய சனிக்கிழமை காலை முதலே அதிகளவில் பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் இருந்தனா். இதனால் திருக்கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
குன்றுமேலய்யன் சாஸ்தா கோயில் :
இத்திருக்கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...