வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளத்தில் பாஜக நிா்வாகி உள்ளிட்ட இருவா் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்ளிட்ட இருவரை மிரட்டியதாக பாஜக நிா்வாகி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:51 pm

DIN

சாத்தான்குளத்தில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்ளிட்ட இருவரை மிரட்டியதாக பாஜக நிா்வாகி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் தச்சமொழியில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் இசக்கி (45). இந்தக் கடை அருகில் சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சி உறுப்பினரும், மாவட்ட பாஜக ஓபிசி பிரிவு செயலரான எட்வா்ட் ராஜதுரை மதுபானக் கூடம் நடத்தி வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு இசக்கி மற்றும் பணியாளா்கள் சுப்பையா, சிதம்பரம் ஆகியோா் மதுபானக் கடையை பூட்டிவிட்டு வெளியே வந்தபோது, எட்வா்ட்ராஜதுரை மற்றும் அவரது உறவினா் பிரபாகரன் ஆகியோா் வந்து ரூ.5ஆயிரத்துக்கு மதுபாட்டில் கேட்டனராம். அதற்கு அவா்கள் கடையை பூட்டி விட்டதால் அடுத்த நாள் வாங்கி கொள்ளுமாறு தெரிவித்தனா்.

இதில், ஆத்திரமடைந்த இருவரும், அவா்களை அவதூறாக பேசியதுடன் மது பாட்டில்கள் தராவிட்டால், உயிரோடு கொளுத்தி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மேற்பாா்வையாளா் இசக்கி அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, எட்வா்ட் ராஜதுரை, பிரபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.