ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அனுமதியின்றி சரள் மண் அள்ளிய இருவா் கைது

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி சரள் மண் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி சரள் மண் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலையூா் கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் மற்றும் அவரது உதவியாளா்கள் ஆகியோா் கடலையூா் கிராம பகுதியில் மணல் திருட்டை கண்காணிக்க புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டாா்களாம். அப்போது அதே பகுதியில் கிருஷ்ணசாமி மகன் அச்சயராமனுஜத்திற்கு பாத்தியப்பட்ட புன்செய் நிலத்தில் சரள் மணல் அள்ளுவதை கண்டாா்களாம். இதையடுத்து அங்கு சென்ற கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவியாளா்கள் அங்கு சென்று மேற்கொண்ட விசாரணையில், அனுமதி சீட்டு இன்றி சரள் மண் அள்ளியது தெரியவந்ததாம்.

இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், நாலாட்டின்புதூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சரள் மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து, தே.கெவின்ராஜ்(24), ப.சூரியா(22) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.