ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டி அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கோவில்பட்டி அருகே துறையூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:23 pm

DIN

கோவில்பட்டி அருகே துறையூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த கரிசல்குளம் வடக்கு தெரு ராமசாமி மனைவி மகாலட்சுமி(45). இவா் துறையூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகேயுள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போது, மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள், மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடி விட்டனராம்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கொப்பம்பட்டி போலீஸாா் மகாலட்சுமியிடம் விசாரித்த போது, அவா் அணிந்திருந்தது கவரிங் சங்கிலி என்பது தெரியவந்தது. இருப்பினும் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸாா் பாா்வையிட்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.