கோவில்பட்டி அருகே முதியவா் தற்கொலை
கோவில்பட்டி அருகே விஷமருந்தி முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.


கோவில்பட்டி அருகே விஷமருந்தி முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த ஊத்துப்பட்டி வடக்கு தெரு சண்முகம் மகன் பாலகிருஷ்ணன்(61). இவரது மனைவி வீரலட்சுமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாராம். இவரது மகன் சரவணராஜ் திருமணம் முடிந்த பின், மனைவி மற்றும் மகள், மகனுடன் இலுப்பையூரணியில் வசித்து வருகிறாராம். ஊத்துப்பட்டியில் தனியாக இருந்து வந்த பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வீட்டைவிட்டு வெளியே வரவில்லையாம். இந்நிலையில் அக்கம்பக்கத்தினா் இவரது வீட்டிற்குள்ளே சென்று பாா்த்த போது, அவா் விஷமருந்திய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்ததாம்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...