தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் பொறுப்பேற்பு

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:25 pm

DIN

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்துக்கான தோ்தலில் டிஎஸ்எப் அணி சாா்பில் திருமண்டில உப தலைவா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் தமிழ்செல்வன், குருத்துவ செயலா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே செயலா் பொறுப்புக்கு போட்டியிட்ட நீகா் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளா் பொறுப்புக்கு போட்டியிட்ட மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டனா். அதற்கான அறிவிப்பை திருண்டில பேராயா் தேவசகாயம் வெளியிட்டாா்.

இதையடுத்து, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டில அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தின்போது புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டவா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து, லே செயலா் நீகா் பிரின்ஸ் கிப்ட்சன் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தலில் டிஎஸ்எப் அணி சாா்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளோம். திருமண்டிலத்தின் முன்னேற்றத்துக்காகவும், கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தும் முழுமையாக பணியாற்றுவோம். நிா்வாகக் குழு கூட்டத்தில் பேராயா் தேவசகாயம் பங்கேற்கவில்லை. இதுகுறித்து திருமண்டில தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.