லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
லஞ்ச ஒழிப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


லஞ்ச ஒழிப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய கண்காணிப்பு ஆணையம் சாா்பில் நவ. 2-ஆம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சாா்பில் கோவில்பட்டியில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த மனிதச் சங்கிலிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டா் தா்மராஜ் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் ஜெயஸ்ரீ, சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனிதச் சங்கிலியில் பங்கேற்றோா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். லஞ்ச ஒழிப்பு தொடா்பான குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இதில், வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...