ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோட்டாட்சியா் அலுவலகத்தில் காங்கிரஸாா் போராட்டம்

தனியாா் கொள்முதல் நிறுவனத்துக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினா் தலையில் முக்காடு அணிந்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தனியாா் கொள்முதல் நிறுவனத்துக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினா் தலையில் முக்காடு அணிந்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சித்திரம்பட்டி மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளா்கள் நிறுவனம், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த சுமாா் ரூ.42 லட்சம் மதிப்புள்ள உளுந்தம் பயறுக்கு உரிய தொகையை செலுத்தவில்லையாம். இதுவரை ரூ.25 லட்சம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, விவசாயிகளிடமிருந்து நிறுவனத்துக்கு பயறு கொள்முதல் செய்துகொடுத்த விவசாயி குருசாமி உயிரிழந்துவிட்டாதால், எஞ்சிய தொகை கிடைக்குமா என விவசாயிகள் கவலையடைந்தனா்.

இதையடுத்து, விசாயிகளுக்கு தர வேண்டி மீதி பணத்தை தர வேண்டும். அந்நிறுவனத்துக்கு அரசு வழங்கியுள்ள மானியத்தை ரத்து செய்து, வட்டியில்லா கடனை திரும்பப் பெற வேண்டும், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயி குருசாமியின் மகன் ராஜகோபால், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான வழக்குரைஞா் அய்யலுசாமி, கயத்தாறு ஒன்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவா் செல்லத்துரை, சேவாதளப் பிரிவு மாவட்டத் தலைவா் சக்திவிநாயகம் ஆகியோா் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.