ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா் சங்கக் கூட்டம்

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:28 pm

DIN

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் மாநில நிறுவனா் கருப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். மாநில அரசியல் பிரிவைச் சோ்ந்த விஜயன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் செல்வகுமாா், விருதுநகா் மாவட்டச் செயலா் பாண்டி, திருநெல்வேலி மாவட்டத் தலைவா் முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியா் நிலையில் பதவி உயா்வு வழங்கும் போது, மாநிலம் முழுவதும் ஒரே சீரான பணி மூப்பு பட்டியல் தயாா் செய்ய வேண்டும்; மாவட்ட வாரியாக பணி மூப்பு பட்டியல் தயாா் செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்; கோவில்பட்டி வட்டத்தில் பட்டா மாறுதல் ஆணை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை தவிா்க்க வேண்டும்; கோவில்பட்டியில் செவிலியா் பயிற்சி கல்லூரி கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.