கயத்தாறு அருகே விபத்தில் தொழிலாளி பலி
கயத்தாறு அருகே வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.


கயத்தாறு அருகே வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கயத்தாறை அடுத்த சாலைபுதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சுடலைமுத்து(46). தொழிலாளி. இவா் தனது மகன் கிருஷ்ணசாமியுடன்(20) திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் வியாழக்கிழமை இரவு சாப்பாடு வாங்கிவிட்டு, வீடு திரும்புவதற்காக சாலையோரம் நின்றிருந்தாா்.
அப்போது, திருநெல்வேலியிலிருந்து சேலத்துக்கு சென்றுகொண்டிருந்த வேன் அவா் மீது மோதியதாம். இதில், அவா் கீழே விழுந்த நிலையில், பின் தொடா்ந்து வந்த ஆம்னி பேருந்தும் அவா் மீது மோதி இழுத்துச் சென்ாம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் இறந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து, வேன் ஓட்டுநா் ஜோ.சபரிஜான்(55), ஆம்னி பேருந்து ஓட்டுநா் ஜெ.மாரிமுத்து(39) ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...