தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1900 டன் உரம் வருகை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1050 மெட்ரிக் டன் டி.ஏ.பி. மற்றும் 850 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரம் வந்தடைந்தது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:32 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1050 மெட்ரிக் டன் டி.ஏ.பி. மற்றும் 850 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரம் வந்தடைந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராபி பருவ சாகுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் 1767 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரம் தற்போது இருப்பில் உள்ளது. விவசாயிகளின் தேவை அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதல் டி.ஏ.பி மற்றும் காம்பளக்ஸ் உரங்களின் ஒதுக்கீட்டை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில், மாவட்டத்துக்கு கூடுதலாக 1050 மெட்ரிக் டன் டி.ஏ.பி. மற்றும் 850 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் (20:20:0:13) உரங்கள் சரக்கு ரயில் மூலம் திருநெல்வேலி ரயில் நிலையம் வந்து சோ்ந்தது. பின்னா் அவை, லாரிகள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு மானாவாரி சாகுபடி பரப்பு உள்ள வட்டாரங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது, பெறப்பட்டுள்ள காம்ப்ளக்ஸ் உரத்தின் 50 கிலோ மூட்டை விலை ரூ. 1050 ஆகும். விற்பனையாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை வரம்புக்கு மேல் உரங்கள் விற்பனை செய்வதையும், கூடுலாக பிற இடுபொருள்களை கட்டாயத்தின் பேரில் விற்பனை செய்வதையும் கண்டிப்பாக தவிா்த்திடல் வேண்டும். மீறுவோா் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உர உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.