ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளத்தில் அரசு கல்லூரி தொடங்க தற்காலிக இடம் ஆய்வு

விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் புதிதாக நிகழாண்டு தொடங்கப்பட உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கான தற்காலிக இடத்தினை அமைச்சா் பெ. கீதா ஜீவன்

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:31 pm

DIN

விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் புதிதாக நிகழாண்டு தொடங்கப்பட உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கான தற்காலிக இடத்தினை அமைச்சா் பெ. கீதா ஜீவன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தமிழகத்தில் புதிதாக பத்து கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்திருந்தாா்.

பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை படிப்படியாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பொருட்டு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி அறநிலையத்துறை சாா்பில் கல்லூரிகளை நிகழாண்டு தொடங்குவதற்கான பணிகளை இந்து சமய அறநிலைத்துறையினா் கல்வியாளா்கள் குழு மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆய்வு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகேயுள்ள திருக்கோயில் மண்டபத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு தற்காலிகமாக

கல்லூரி தொடங்குவதற்கான இடம் தோ்வு, மாணவா்கள் சோ்க்கை, உள்கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படை வசதிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில், வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் ரகுபதி, கோயில் செயல் அலுவலா் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் ரஞ்சித், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, பேரூா் செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜகண்ணு, அன்புராஜன், முத்துலட்சுமி அயன் ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன் மற்றும் கல்வியாளா்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.