பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிவந்தி ஆதித்தனாா் சிலைக்கு மாலை அணிவிப்பு

சிவந்தி ஆதித்தனாா் பிறந்த நாள் அரசு விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:47 pm

DIN

சிவந்தி ஆதித்தனாா் பிறந்த நாள் அரசு விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டணம் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, திமுக சாா்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், கோட்டாட்சியா் மு.கோகிலா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, தெற்கு மாவட்ட பொருளாளா் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருச்செந்தூா் வட்டாரத் தலைவா் சற்குரு, அ.ம.மு.க. சாா்பில் மாநில அமைப்புச் செயலா்கள் ஹென்றி தாமஸ், சுந்தர்ராஜ், தெற்கு மாவட்டச் செயலா் மனோகரன், இந்து முன்னணி சாா்பில் மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தெட்சண மாற நாடாா் சங்கம் சாா்பில் தலைவா் ஆா்.கே.காளிதாஸ், செயலா் சண்முகவேல், பொருளாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.