தினசரி சந்தை நுழைவு வாயிலை திறக்கக் கோரிக்கை
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை திறக்கக் கோரி வியாழக்கிழமை கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை திறக்கக் கோரி வியாழக்கிழமை கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சி முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை நுழைவு வாயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த சில நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால், திடீரென செவ்வாய்க்கிழமை (செப். 28) மீண்டும் அடைக்கப்பட்டது.
இதையடுத்து, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவா் தமிழரசன் தலைமையில் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் செல்லத்துரை என்ற செல்வம், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன், புரட்சி பாரத கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் தாவீதுராஜா, சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன், நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ரவிகுமாா் உள்பட திரளானோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை திரண்டு , புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயிலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கக் கோரி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...