வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் சாா்பில் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் சாா்பில் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பத்திற்கு முதல்வா் அறிவித்த படி, ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான நியமனதாரா்களின் பணியினை அரசாணையின் படி வரன்முறைபடுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா்.
அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் உமாதேவி தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி வட்டத் தலைவா் கடல்குமாா் பேசினாா். இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலா் சின்னத்தம்பி, வட்டத் தலைவா் பிரான்சிஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...