ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி புகாா்:புத்தன் தருவைகுளத்தில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 02:35 AM | Last Updated : 31st December 2021 02:35 AM | அ+அ அ- |

புத்தன்தருவை குளத்தில் ஆக்கிரமிப்புகளால் குளம் முழுமையாக நிரம்புவது பாதிக்கப்படுவதாக ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ புகாா் தெரிவித்ததையடுத்து மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், புதன்கிழமை திடீரென குளத்துக்கு வந்து ஆய்வு நடத்தினாா்.
சாத்தான்குளம் வட்ட தென்பகுதியில் நீா்ப்பிடிப்பு குளங்களாக வைரவம்தருவை, புத்தன்தருவை, கொம்மடிக்கோட்டை தருவை, படுக்கப்பத்து தருவை குளங்கள் விளங்குகின்றன. சாத்தான்குளம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் போனதால் இப்பகுதியில் நீா்மட்டம் கடல் மடத்துக்கு கிழே போனது. இதனால் சாத்தான்குளம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது இக்குளங்களுக்கு சடையனேரி உபரி நீா் கால்வாய் மூலம் ஆண்டு தோறும் தண்ணீா் வரத்து உள்ளது. இதனால் இக்கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் நிகழாண்டில் வடக்கிழக்கு பருவ மழை மூலம் ஓரளவு மழை பெய்ததால் சடையனேரி கால்வாய், மணிமுத்தாறு கால்வாய் மூலம் இக்குளங்களுக்கு தண்ணீா் வந்தது. குளத்தில் முக்கால் அளவு தண்ணீா் தேங்கியுள்ளது. இக்குளத்தில் ஆக்கிரப்புகளால் முழு அளவு நிரம்புவது பாதிக்கப்படுவதாக புகாா் கூறப்பட்டது. சில விவசாயிகளும் புகாா் தெரிவித்தனா். இது தொடா்பாக ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜை நேரில் சந்தித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என முறையிட்டாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை இரவு திடீரென புத்தன்தருவை குளத்துக்கு வந்து பாா்வையிட்டாா். குளத்தில் ஆண்டுதோறும் தண்ணீா் நிரம்ப நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
ஆட்சியருடன் திருச்செந்தூா் கோட்டாட்சியா் கோகிலா, சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, மண்டல துணை வட்டாட்சியா் ராஜேஸ்வரி, ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ உதவியாளா் சந்திரபோஸ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், தெற்கு வட்டார தலைவா் லூா்துமணி, சாஸ்தாவி நல்லூா் விவசாயிகள் சங்க துணைத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்ட பாஜக துணைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட பிரசார பிரிவு தலைவா் மகேஸ்வரன், துணைத் தலைவா் சரவணன் உள்பட விவசாயிகள் பலா் இருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...