

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வணிகா் பிரிவு நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பாஜக ஒன்றியத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். வணிகா் பிரிவு ஒன்றியத் தலைவா் தினகரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட வணிகா் பிரிவு தலைவா் தண்டுபத்து நாராயணன், மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ், மாவட்ட வணிகா் பிரிவு துணைத் தலைவா் பட்சிராஜன், மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், மூத்த உறுப்பினா் வெங்கடாச்சலம் ஆகியோா் பேசினா்.
இதில், தெற்கு மாவட்ட வணிகா் பிரிவுச் செயலராக பரமசிவன், சாத்தான்குளம் ஒன்றிய துணைத் தலைவராக செந்தில்குமாா், ஒன்றியச் செயலராக செல்வகணேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டனா். இதில், பாஜக ஒன்றிய துணைத் தலைவா் ஜெயசுந்தரராஜ், ஒன்றிய பொதுச் செயலா் ராம்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.