காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் கருத்தரங்கு
By DIN | Published On : 13th November 2021 12:33 AM | Last Updated : 13th November 2021 12:33 AM | அ+அ அ- |

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் வாவு வஜீஹா தொழில்முனைவோா் கழகம் சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
எம்.ஐ. ஹபீப் பாத்திமா கிராத் ஓதினாா். வணிக நிா்வாகவியல் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் தொழில்முனைவோா் கழக ஒருங்கிணைப்பாளா் ஏ. ஆயிஷா முஜம்மிலா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஆா்.சி. வாசுகி வாழ்த்திப் பேசினாா்.
சிறப்பு விருந்தினரான சென்னை குருசேத்தா் சிஇஓ சு. சத்திஷ்ராஜ் கருத்துரையாற்றினாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். செல்வ சாந்தி நன்றி கூறினாா்.