‘தூத்துக்குடி-திருச்செந்தூருக்கு ஆறுமுகனேரி வழியாக ரயில் சேவை’
By DIN | Published On : 13th November 2021 12:17 AM | Last Updated : 13th November 2021 12:17 AM | அ+அ அ- |

தூத்துக்குடி - திருச்செந்தூருக்கு ஆறுமுகனேரி வழியாக ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழு வலியுறுத்தியுள்ளது.
கரோனா தடுப்பு பொது முடக்கத்துக்குப்பின், திருநெல்வேலி- திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டதை தொடா்ந்து, முதலாவது ரயிலுக்கு ஆறுமுகனேரி நிலையத்தில் ரயில்வே வளா்ச்சி குழு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா், அந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி தலைமையில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் நகரச் செயலா் அமிா்தராஜ், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் சுகுமாா், முருகேசபாண்டியன், லிங்கபாண்டியன், பொன்மாடசாமி, மாரிசெல்வம், சுந்தர்ராஜ், பாரத், கொம்பையா, ராமஜெயம், கற்பகவிநாயகம், சந்தியா, நாகநாதன், சுந்தரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ஆறுமுகனேரி நிலையத்தை சந்திப்பாக கொண்டு தூத்துக்குடி- திருச்செந்தூா் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும். திருச்செந்தூா்- திருநெல்வேலிக்கு அனைத்து பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.