தூத்துக்குடியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
By DIN | Published On : 08th October 2021 03:08 PM | Last Updated : 08th October 2021 03:08 PM | அ+அ அ- |

தூத்துக்குடியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் 20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவைக் கடத்த இருந்த 4 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரான்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர் .
அப்போது அங்கு ஒரு படகில் 15 மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500-கிலோ எடைகொண்ட கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர் இதனையடுத்து அந்த கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூபாய் 20 கோடி என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக திரேஸ் புரத்தைச் சேர்ந்த ஜெனிஸ்டன் செல்வராஜ் உட்பட4 பேரை கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.