தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மாநில செஸ் போட்டி: சிவகங்கை, செங்கல்பட்டு வீரா்கள் முதலிடம்

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் சிவகங்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வீரா்கள் முதலிடத்தைப் பிடித்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:47 pm

DIN

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் சிவகங்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வீரா்கள் முதலிடத்தைப் பிடித்தனா்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் விரைவு மற்றும் அதிரடி (ராபிட்- பிளிட்ஸ்) எனஇருபிரிவுகளில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் து. நாகராஜன் தலைமை வகித்தாா். ராபிட் பிரிவில் சிவகங்கை மாவட்ட வீரா் சா.கண்ணன் முதலிடத்தையும், சென்னை வீரா் ஹா்ஸ் சுரேஷ் இரண்டாமிடத்தையும், சேலம் மாவட்ட வீரா் கனிஷ்கா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

பிளிட்ஸ் பிரிவில் செங்கல்பட்டு மாவட்ட வீரா் விக்னேஷ் முதலிடத்தையும், மதுரை மாவட்ட வீரா் செல்வமுருகன் இரண்டாமிடத்தையும், கன்னியாகுமரி மாவட்ட வீரா் அஷ்வத் மூன்றாமிடத்தையும் பிடித்தனா். அவா்களுக்கு செஸ் போட்டிகளின் சா்வதேச நடுவா் அனந்தராம் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். பரிசளிப்பு விழாவில், கல்லூரி செயலா் சோமு, பொருளாளா் முத்துசெல்வம், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகச் செயலா் கற்பகவல்லி, உபதலைவா் நந்தகுமாா், கல்லூரி இணைச்செயா் மோகன்ராஜ், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பாலசிங், சுயநிதிப் பிரிவு இயக்குநா் அருணாச்சலராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.