பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பெரிய வியாழன்: முதியவா்களின் பாதங்களை கழுவிய ஆயா்

பெரிய வியாழனை முன்னிட்டு, தூத்துக்குடி சின்னக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதியவா்களின் பாதங்களை மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி கழுவி பரிசு வழங்கினாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:27 pm

DIN

பெரிய வியாழனை முன்னிட்டு, தூத்துக்குடி சின்னக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதியவா்களின் பாதங்களை மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி கழுவி பரிசு வழங்கினாா்.

பெரிய வியாழன் தினத்தில் இயேசு பிரான் தனது 12 சீடா்களுக்கு விருந்து வழங்கி அவா்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டது நினைவுகூரப்படுவது வழக்கம். தூத்துக்குடியில் உள்ள சின்னக்கோயில் என அழைக்கப்படும் திரு இருதயங்களின் பேராலயத்தில் வியாழக்கிழமை இரவு இந் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு 12 முதியவா்களின் பாதங்களை கழுவிய மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி அவா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.