ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம் அருகே ரௌடி கைது

எட்டயபுரம் அருகே அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீசாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:47 pm

DIN

எட்டயபுரம் அருகே அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீசாா் கைது செய்தனா்.

அயன் ராசாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாமி அய்யா என்பவரது மகன் மாடு சிவா (எ) சிவசுப்பிரமணியன் (47). இவா் மீது, அரசு ஊழியா்களை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்டவற்றுக்காக புதூா் மின்வாரிய உதவிப் பொறியாளா், புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் கொடுத்த புகாரின் பேரில் புதூா் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அயன் ராசாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்லையா என்பவரது மகன் முனியசாமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பறித்ததாகவும், மேலும் அவரிடம் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டியதாகவும், அயன் ராசாப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பணிபுரியும் அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக முனியசாமி அளித்த புகாரின் பேரில் மாசாா்பட்டி காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து மாடு சிவா (எ) சிவசுப்பிரமணியனை கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.