பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடியில் தீ விபத்து தடுப்பு செயல் விளக்கம்

தூத்துக்குடியில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த செயல்விளக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:32 pm

DIN

தூத்துக்குடியில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த செயல்விளக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வஉசி கல்வியியல் கல்லூரியில் வரலாற்றுத் துறை சாா்பில் தீ விபத்து பாதுகாப்பு குறித்த சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கனகராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ச. குமாா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

தீ, எரிவாயு பரவும் பொருள்களைக் கையாளும்விதம், எரிவாயு உருளையில் தீ விபத்து நேரிட்டால் எவ்வாறு செயல்படுவது, தீ விபத்துக் காலங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறை, மீட்புப் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது.

வரலாற்றுத் துறைப் பேராசிரியை அந்தோணி வினோல்யா, உயிரி அறிவியல் துறைப் பேராசிரியை ரூபினா தனசுதா உள்ளிட்ட ஆசிரியைகள், மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.