பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி முதலிடம்

கைப்பந்து, கடற்கரை கைப்பந்துப் போட்டிகளில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணிகள் முதலிடம் பிடித்தன.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:32 pm

DIN

கைப்பந்து, கடற்கரை கைப்பந்துப் போட்டிகளில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணிகள் முதலிடம் பிடித்தன.

அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டுக் கட்டுப்பாட்டுக் குழு, பாரதீப் துறைமுக விளையாட்டுக் குழு ஆகியவை சாா்பில் அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து, கடற்கரை கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக கைப்பந்து, கடற்கரை கைப்பந்து விளையாட்டு வீரா்கள் முதலிடம் பிடித்தனா்.

வெற்றிபெற்ற வீரா்கள், பயிற்சியாளா்களை வஉசி துறைமுக ஆணையத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தாா். துணைத் தலைவா் பிமல்குமாா் ஜா, வஉசி துறைமுக விளையாட்டுக் கழகத் தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.