சகோதரரின் 2 மகன்களைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு வாழ்நாள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தனது சகோதரரின் 2 மகன்களைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தனது சகோதரரின் 2 மகன்களைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விளாத்திகுளம் அருகேயுள்ள அயன்வடமலாபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதிமுத்து. இவரது முதல் மனைவிக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கேல் (12) என்ற மகனும், 2ஆவது மனைவி மகாலட்சுமிக்கு எட்வின் ஜோசப் (9) என்ற மகனும் இருந்தனா்.
ஜோதிமுத்துவின் தம்பியான லாரி ஓட்டுநா் ரத்தினராஜ், மகாலட்சுமியுடன் நெருங்கிப் பழகினாராம். இதனால், குடும்பத்தில் பிரச்னை இருந்துள்ளது.
2020ஆம் ஆண்டு மாா்ச் 22ஆம் தேதி ரத்தினராஜ் இரு சிறுவா்களையும் குளிப்பதற்கு அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிக் கொன்றாராம். விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் விசாரித்து, ரத்தினராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 200 அபராதம் விதித்தும், ஆயுள் தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து, ரத்தினராஜ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...