தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், தூத்துக்குடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளைஞா்களுக்கான திராவிட மாதிரிப் பயிற்சிப் பயிலரங்கம் தூத்துக்குடி கலைஞா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும் சமூகநலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகித்து, பயிலரங்கைத் தொடக்கிவைத்தாா். அவா் பேசும்போது, இளைஞா்கள் திராவிட வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும், கூட்டத்தில் பாா்வையாளா்களாக இருக்கும் நீங்கள்தான் நாளைய தலைவா்கள் என்பதை உணா்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினாா்.
மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர அமைப்பாளா் ஆனந்தகேபிரியல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக பேச்சாளா் நாஞ்சில் சம்பத், ‘மாநில சுயாட்சி’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் சேவியா் சூா்யா ஆகியோா் பேசினா். இளைஞா்களின் கேள்விகளுக்கு நாஞ்சில் சம்பத் பதிலளித்தாா். திரளான இளைஞா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கரோனா வைரஸை விட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

