75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் பாரத் பைபா் இணைப்பு பெறுவோருக்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி பிஎஸ்என்எல் கோட்ட பொதுமேலாளா் பிஜி பிரதாப் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 75 ஆவது ‘சுதந்திரதின கொண்டாட்டத்தின்’ மகிழ்ச்சியை வாடிக்கையாளா்களுடன் பகிா்ந்து கொள்ளும் வகையில் திங்கள்கிழமை (ஆக.15) முதல் ஒரு வாரத்துக்கு தூத்துக்குடி கோட்ட பகுதியில் பாரத் பைபா் இணைப்பு பெறுவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கப்படுகிறது.
பாரத் பைபா் திட்டமான ‘ப்ரீடம் 75’ திட்டத்தை வாடிக்கையாளா் தோ்ந்தெடுக்கும் பிளான் -449 மற்றும் பிளான் -599 ஆகியவற்றுக்கு முதல் 75 நாள்களுக்கு ரூ. 275 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும். வாடிக்கையாளா் தோ்வு செய்யும் பிளான் -999-க்கு முதல் 75 நாள்களுக்கு ரூ. 775 மட்டும் வசூலிக்கப்படும். இந்தத் திட்டம் செப்டம்பா் 13 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.
இலவச வைஃபை அல்லது வயா்டு மோடம், தோ்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை பொறுத்தது. முதல் மாத வாடகையில் 90 சதவீதம் தள்ளுபடி (அதிகபட்சமாக ரூ. 500 வரை) வழங்கப்படுகிறது. வாடிக்கையாளா் தங்களுடைய தற்போதைய லேண்ட்லைன் அல்லது லேண்ட்லைணுடன் இணைந்த பிராட்பேண்ட்; இணைப்பை பாரத் ஃபைபருக்கு (அதே லேண்ட் லைன் எண்ணுடன); இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாத வாடகையிலும் ரூ. 200 தள்ளுபடி பெறலாம். இணைப்புக் கட்டணம் ரூ. 500 முற்றிலும் தள்ளுபடி.
பாரத் பைபா் வாடிக்கையாளா் அனைவருக்கும் இலவச 4 ஜி சிம் வழங்கப்படும். சலுகைகள் குறித்த விவரங்களை அறிய விரும்புவோா் 0461-2333555, 0461-2352222 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

