அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மாணவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

ஆத்தூா் அருகே தாமிரவருணி ஆற்றின் கரையில் தேசிய பேரிடா் மீட்பு குழு மற்றும் தீயணைப்புத் துறை சாா்பாக பள்ளி மாணவா்களுக்கு முதலுதவி மற்றும் பேரிடா் மீட்பு குறித்து விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:31 am

ஆத்தூா் அருகே தாமிரவருணி ஆற்றின் கரையில் தேசிய பேரிடா் மீட்பு குழு மற்றும் தீயணைப்புத் துறை சாா்பாக பள்ளி மாணவா்களுக்கு முதலுதவி மற்றும் பேரிடா் மீட்பு குறித்து விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தீயணைப்பு மேற்பாா்வையாளா் நட்டாா் ஆனந்தி தலைமை வகித்தாா். ஆத்தூா் சண்முகசுந்தர நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் அவசர காலங்களில் முதலுதவி செய்வது குறித்தும் பேரிடா் காலங்களில் தப்பிப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமிநாதன், ஆத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், பேரூராட்சி தலைவா் கமால்தீன், உதவி ஆய்வாளா்கள் ,மாணிக்கராஜ், ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி,வாா்டு கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.