வெளிநாடுகளில் இருக்கும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்துவேன் என்றாா் கனிமொழி எம்பி.
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சாா்பில் திருச்சி மண்டல துணை இயக்குநா் அருண்ராஜ் தலைமையிலும், சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வுப் பணிகள் இயக்குநா் பிரபாகரன் தலைமையிலும் நடைபெற்று வருகிறது.
இதில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆதிச்சநல்லூரில் புதையிடப் பகுதியில் தங்கத்தினாலான நெற்றிப் பட்டம் சிவகளை அருகே வாழ்விடப் பகுதியான பராக்கிரம பாண்டியிலும் நடைபெற்ற அகழாய்வின் போது சிறிய அளவிலான தங்க காதனியும் கிடைத்தது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன்பெரியாசாமி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
பின்னா் கனிமொழி எம்.பி., செய்தியாளா்களிடம் பேசுகையில்,
ஆதிச்சநல்லூா் அகழாய்வில் தங்கத்திலான நெற்றிப் பட்டம் கண்டறியப்பட்டது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆதிச்சநல்லூா் அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்டு வெளிநாடுகளில் இருக்கும் பழங்கால பொருள்களை மீண்டும் இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான விண்ணப்ப கடிதத்தை எம்பி என்ற முறையில் அளிப்பேன் என்றாா் அவா்.
முன்னதாக சிவகளையில் கனிமொழி எம்பிக்கு சிவகளை அகழாய்வுப் பணிகள் இயக்குநா் பிரபாகரன், அகழாய்வுப் பணியில் கிடைத்த பொருள்கள் குறித்து விளக்கம் அளித்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு, குமரகுருபரா் ஆண்கள் மேல்நிலை பள்ளி வரலாற்று ஆசிரியா் மாணிக்கம், ஆதிச்சநல்லூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் சங்கா் கணேஷ், சமூக ஆா்வலா்கள் மணிகண்டன், முத்துமாலை உள்பட பலா் கலந்துகொண்டாா்.
அகழாய்வுப் பணியின் போது தங்கம் கண்டுபிடித்த தொழிலாளா்களை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்

உதகையில் காவலா் தற்கொலை

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

