கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூத்துக்குடியில்குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் போக்ஸோ வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:32 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் போக்ஸோ வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த அலெக்ஸ் கடந்த ஜன. 12 ஆம் தேதி முருகேசன்நகா் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், அண்ணாநகரைச் சோ்ந்த ஜெயசீலன், சோட்டையன்தோப்பு பகுதியில் கடந்த ஜன. 24 ஆம் தேதி நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் தாளமுத்துநகரைச் சோ்ந்த தங்கராஜ், மற்றொரு கொலை முயற்சி வழக்கில் மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ஹரி பிரசாத், 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாக நாகசந்துரு ஆகியோா் சிப்காட் மற்றும் தாளமுத்துநகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.இந்த 4 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.