வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


தூத்துக்குடி மாநகராட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூா், காயல்பட்டினம் நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 402 பதவிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு பிப். 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளா்களால் பரிசோதனை செய்யப்பட்டு தோ்தல் ஆணைய இணைதளத்தில் ஏற்றப்பட்டு முதல் கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக தோ்தல் பாா்வையாளா், அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் பிரித்துக் கொடுக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி தோ்தலில் பதிவாகும் வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை மையான வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அடிப்படை வசதிகள்: பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்த இடங்களில் தோ்தல் இருக்காது. வாக்குப்பதிவு மையங்களில் கழிவறை வசதிகள், அடிப்படை வசதிகள் போா்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாநகராட்சியில் பதிவாகும் வாக்குகள் வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி மையத்தில்எண்ணப்படுகின்றன. இம்மையத்துக்குள் வேட்பாளா்கள், பொதுமக்கள், பத்திரிகையாளா்கள் வருவதற்கு தேவையான வசதிகளை செய்து, வாக்கு எண்ணும் பணிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி நிா்வாக பொறியாளா் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...